சமூர்த்தி பிரிவால் வழங்கப்படும் சேவைகளின்
சுருக்கம்சமுர்த்தி சமூக பாதுகாப்பு பயனாளிகளுக்கான நிதி வெளியீடு
- இறப்பு ஏற்பட்டால், இறப்புச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- திருமணம் நடந்தால், திருமணச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- பிறப்பு ஏற்பட்டால், பிறப்புச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டாய சேமிப்பு நிதிகளின் வெளியீடு
- நிதி கோரப்படுவதற்கான காரணம் நோய் எனில், மருத்துவ அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும்.
- கோரிக்கை உயர் கல்வி நோக்கங்களுக்காக இருப்பின், ஆதரவு கடிதங்களும் சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- கோரிக்கை முதுமை காரணமாக இருப்பின், 70 வயதிற்கு மேற்பட்டவர் என்பதை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டையின் சான்றிடப்பட்ட நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் ஒரு கோரிக்கை கடிதமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- சமுர்த்தி பயனாளிகளின் சுயதொழில் தேவைகளுக்காகவும் கட்டாய சேமிப்புகள் வெளியிடப்படலாம்.
வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்
- வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கக்கூடிய சமுர்த்தி பயனாளிகளின் திட்டங்களுக்கு, யோசனைகளைப் பெற்று மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்கு உட்படுத்திய பின்னர் உபகரணங்கள் வழங்கப்படும்.













